மரணச் சடங்குகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு வெளியானது
கோவிட் நோய்த் தொற்று அன்றி வேறும் காரணிகளினால் மரணிப்போரின் இறுதி கிரியைகள் 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துவிதமான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மரண வீட்டில் 25 பேருக்கு மேல் பிரசன்னமாகியிருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் நோய்த் தொற்று பரவுகை அச்சுறுத்தல் காரணமாக சுகாதார அமைச்சு பல்வேறு சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
