அரசியல் நிலைகளை வலுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தமது அரசியல் நிலைகளை வலுப்படுத்தும் நகர்வுகளை தீவிரப்படுத்துகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே பொதுஜன பெரமுனவின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பசிலின் ஒப்புதலும் கிடைத்தது.
இந்தநிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தனது தளத்தை விரிவுபடுத்துவதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தம்முடன் இணைந்திருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பொது எதிர்க்கட்சி
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 'ஒருங்கிணைந்த பொது எதிர்க்கட்சி' எனும் அடிப்படையில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதற்கென ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த கூட்டு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கூட்டில் டளஸ் அழகப்பெரும தலைமையிலான எதிர்க்கட்சியினர் உள்ளடங்குகின்றனர். எனினும் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்தக் கூட்டில் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
