பொதுத்துறை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
நாட்டின் பொதுத் துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்துள்ளார்.
அரசு துறையின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித:துள்ளார்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட "பிரஜா சக்தி தேசிய திட்டம்" நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மனிதவள மேம்பாட்டிற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியதாகக் குறிப்பிட்டார்.
அதேபோல், மாவட்ட செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்களை வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசுத் துறையை மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மாற்றுவதே அரசின் இலக்காகும் என தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
