கோட்டாபயவுக்கு எதிராக அரபு வசந்தம் முறையில் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (photos)
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால் அரபு வசந்த பாணியில் போராட்டங்களை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி சமகி ஜன எச்சரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பது பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாறாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது கொள்கைகள் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டு, தற்போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தமது கட்சி விரும்புவதாக அவர் கூறியுள்ளார்
நாளையதினம் மார்ச் 15 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
கொழும்பில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் நிலைமைக்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறு பெர்னாண்டோ பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி பரிசீலிக்காவிட்டால், அரபு வசந்த பாணியில் போராட்டங்களை நடத்தவும் எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
அரபு வசந்தம் என்பது 2010 களின் முற்பகுதியில் அரபு உலகின் பெரும்பகுதி முழுவதும் பரவிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் தொடர் ஆகும்.
இது ஊழல் மற்றும் பொருளாதார தேக்கத்திற்கு பதில்தேடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் துனிசியாவில் ஆரம்பமான இந்த எதிர்ப்புகள் ஏனைய ஐந்து நாடுகளுக்கும் பரவியது.
லிபியா, எகிப்து, யேமன், சிரியா மற்றும் பஹ்ரைன், ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்போது கலவரங்கள், உள்நாட்டுப் போர்கள் அல்லது கிளர்ச்சிகள் உட்பட பெரும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொராக்கோ, ஈராக், அல்ஜீரியா, லெபனான், ஜோரதான், குவைத், ஓமன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டிஜிபூட்டி, மொரிட்டானியா, பாலஸ்தீனம், சவுதி அரேபியா மற்றும் மொராக்கோ ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் சிறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
