அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கோட்டாபய அரசு (Video)
கொழும்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சுகாதார சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணி எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதேவேளை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டல்களை நேற்று (15) வெளியிட்டார்.
சுகாதார பணிப்பாளரின் உத்தரவிற்கு பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
