கோட்டாபய அண்டவெளியில் கிரகத்தை தேடுகிறாரா:முஜிபுர் ரஹ்மான் கேள்வி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பயண முடிவு செவ்வாய் கிரகத்திலா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டுக்கும் கோட்டாபய செல்ல முடியாது

பதவி விலகல் கடித்தை அனுப்ப வேண்டுமாயின் பயண முடிவுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி ஏன் காலம் தாழ்த்து வருகிறார். உலகில் மூலைக்கு செல்ல அவருக்கு போதுமான காலம் இருக்கின்றது.
இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு செல்ல முடியாது.
அண்டவெளியில் வேறு கிரகத்தை தேடிவதன் காரணமாகவே ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை அனுப்ப தாமதித்து வருகின்றாரோ என்ற நியாமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிடும் ஜனாதிபதி

இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்ற பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என கூறப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்வது தாமதமாகியுள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான SQ437 விமானத்தில் ஜனாதிபதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்தார்.
பாதுகாப்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த பயணம் நிறுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்விருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாலைதீவில் இருந்து தனிப்பட்ட விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டு வருகிறார்.