கோட்டாபயவிடமிருந்து உத்தியோகபூர்வமாக கிடைத்த பதவி விலகல் கடிதம்! ஊடகப் பிரிவின் மற்றொரு அறிவித்தல்
புதிய இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தின் சட்டப்பூர்வமான தன்மையை பரிசோதித்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கோட்டாபய அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோட்டாபயவின் விசேட அறிவித்தல்
இதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினத்திற்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
