செப்டம்பர் மாதம் நாடு திரும்பும் கோட்டாபய:மீண்டும் தகவல் வெளியிட்ட உதயங்க வீரதுங்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.
24 ஆம் திகதி வருவார் என தவறுதலாக கூறினேன்

இந்த மாதம் 24 ஆம் திகதி கோட்டாபய இலங்கை திரும்புவார் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அது தவறுதலாக கூறப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் செய்த அந்த தவறு காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவது மேலும் தாமதமானதாகவும் உதயங்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் கோட்டாபய நாடு திரும்புவார்

எவ்வாறாயினும் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி தனக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட உடன் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் உதயங்க வீரதுங்க கோட்டாபய நாடு திரும்புவது தொடர்பான புதிய தகவலை வெளியிட்டுள்ளார். உதயங்க வீரதுங்கவின் தாயும் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam