கோட்டாபயவின் வருகையால் ரணிலுக்கு ஏற்படும் கடும் நெருக்கடி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும்.
சர்வதேச நாணய நிதியம்
"சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம்.
இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இலங்கைக்குள் தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.
இவற்றையெல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்நோக்கும் போது கோட்டாபய நாடு திரும்புகின்றார்.
கோட்டாபயவின் வருகை
இந்நிலையில் கோட்டாபயவுக்காக ரணில் என்ன செய்தாலும் விமர்சிக்கப்படுவார்.
பொதுமக்களில் பெரும்பாலானோர் ரணிலைக் கோட்டாபயவின் மனிதராகவே கருதுகின்றனர்.
எனவே, ரணில் துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவர் ஒரு
புத்திசாலி அரசியல்வாதி. இந்தத் தந்திரமான பிரச்சினையைத் துணிச்சலுடன்
சமாளிப்பார்" என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
