கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான சீனி வரி மோசடி வழக்கு தொடர்பில் வெளியான தகவல்....
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரி மோசடியால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான 50 ரூபா வரியை 25 சதமாகக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 1,590 கோடி ரூபா நட்டத்தை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட காரணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியினால் கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர், பிரமிட் வில்மா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சஜாத் மவூஸூன், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri