கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற தீவிரமாக செயற்பட்ட மகிந்த குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர்கள் இருவரும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதவி நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை பசில் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கள் இருந்ததாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள வரிசைகளுக்கு அந்த அமைச்சுகளே பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
