காலிமுகத்திடல் போராட்ட பூமியில் இருந்து நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படும் யோசனைகள்!
புதிய ஆட்சி யுகத்தை உருவாக்கும் நோக்கில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் மற்றும் மனுவொன்றை நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்க முன்வந்துள்ளனர்.
இந்த அமைதிப் போராட்டத்தின் 36வது நாளில், தாம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்காக கோரிக்கைகளின் பட்டியலை தயாரித்துள்ளதாக சமூக ஆர்வலர் சமீர டெட்டுவாகே தெரிவித்தார்.
இந்தப் போராட்டம் காலி முகத்திடலோ அல்லது 'கோட்டாகோகமயிலோ மட்டுப்படுத்தப்படவில்லை.
இது முழு இலங்கை மக்களுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கான போராட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடலில் மக்கள் நடத்திய போராட்டம் ஒரு அடையாள தருணம் என்றும், உலக வரைபடத்தில் இலங்கையை நிலைநிறுத்தியுள்ளது என்றும் சமூக ஆர்வலர் மனுரி பாபசாரி தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லவில்லை என்றும் இங்கு அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
எனினும் தாம் 200 க்கும் மேற்பட்ட அமைப்புக்களுடன் விவாதித்த பின்னரே இந்த கோரிக்கைகளை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காலிமுகத்திடல் போராட்ட பூமியின் கோரிக்கைகள்!
1.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச ஆட்சி உடனடியாக அதிகாரத்தை கைவிட வேண்டும்.பதவி விலகிய பின்னர், ஆட்சியில் உள்ளவர்கள் இலங்கையின் ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியில் எந்தவொரு தேவையற்ற செல்வாக்கையும் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
2.தேசத்தை மீட்சியின் பாதையில் கொண்டு செல்ல, ஒரு இடைக்கால அரசாங்கம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு (18 மாதங்களுக்கு உட்பட்டதாக) நிறுவப்பட வேண்டும்.
3.அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஏ ஒழிப்பு மற்றும் அத்தியாவசியத் திருத்தங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
4. தற்போதைய நெருக்கடியை நிர்வகிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து செயல்முறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நிலவும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. எனவே, தற்போது நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் சட்டப்பூர்வ வழிகளில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை மீட்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் வருகையாளர்களின்; உரிமைகளை மதிக்க சட்டத்தின் ஆட்சி உடனடியாக மீண்டும் நிறுவப்பட வேண்டும்.
7. இலங்கையின் அரசியலமைப்பில் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உள்ளடக்கப்படவேண்டும். (இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது வாழ்வதற்கான உரிமை பற்றிய விதிகளைப் பின்பற்றவும்)
8. இடைக்கால அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
