ஜனாதிபதி மாளிகைக்குள் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம்! கோட்டாபயவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (13) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கடந்த ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம் |

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
