கோட்டாபயவுக்காக மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனால் பரபரப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய போது அவரை பார்க்க முடியாத நபர் ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டாபய நேற்று முன்தினம் நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல எதிர்பார்த்திருந்த ஒருவர் அதனை தவறவிட்டுள்ளார். கம்பஹாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு தவறவிட்டுள்ளார்.
மனவேதனையில் நபர்
இந்த நபர் கோட்டாபய ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர். இவர் பல தேர்தல்களில் கட்சிக்காகப் பாடுபட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து கடும் மன வருத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கோட்டாபய நாடு திரும்புவார் என்பதை அறிந்த இந்த நபர், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க கட்டுநாயக்க செல்ல பல நாட்களாக தயாராகி வந்துள்ளார்.
தனது முச்சக்கர வண்டியில் கட்டுநாயக்க செல்ல செல்வதற்கு திட்டமிட்டவர் அதற்காக தொலைபேசியில் அலாரத்தை வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி
எனினும் மனைவி இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், நள்ளிரவில் எழுந்த அவரது மனைவி, அலாரத்தை அணைத்துள்ளார்.
அதற்கமைய, அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல், போனதுடன் தாமதமாக எழுந்ததால், மனைவியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
அதீத கோபம் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு மனைவியை கடுமையாக தாக்கியதாகவும் இதனால் மனைவி படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
