கோட்டாபய தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருவார் என தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருவார் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபயவுக்கான பதவி விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்
சதி செய்யும் ரணில் - கடும் வருத்தத்தில் கோட்டாபய |
முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதற்காக தற்போது பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் பதவி விலகுவார் என கூறப்படுகிறது.
தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச அடுத்த சில தினங்களில் இலங்கை வரவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கையின் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதியின் உறவினருமான உதயங்க வீரதுங்க நேற்று முன்தினம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் அரசியலில் ஈடுபடுவார் என தான் நம்பவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற கோட்டாபய
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் நடந்த பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு சென்ற, அவர் அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்று அங்கு ஒரு இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து அவர் கடந்த 11 ஆம் திகதி இரவு தாய்லாந்து சென்றடைந்தார். தாய்லாந்தில் தங்கியிருக்க அவருக்கு 80 நாட்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் கோட்டாபய - யாழில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் |