மனித புதைகுழிகள் தொடர்பான பதிவுகளை மறைத்த கோட்டாபய: எழுந்துள்ள புதிய சர்ச்சை

Sri Lanka Police Matale Gotabaya Rajapaksa Government Of Sri Lanka
By Sheron Jun 22, 2023 08:08 PM GMT
Report

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்துள்ளார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்புகள் கூறியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989 ஆம் ஆண்டுகளில் மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்துடன், அந்தக் காலப் பகுதிக்குரியது என கூறப்படும் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய மாகாணமான மாத்தளை மாவட்டத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து பொலிஸ் பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய பலம்வாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்சே உத்தரவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகள் தொடர்பான பதிவுகளை மறைத்த கோட்டாபய: எழுந்துள்ள புதிய சர்ச்சை | Gotabaya Ordered Police Records Destroyed Stall

பல்லாயிரக்கணக்கான எச்சங்கள்

கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டியதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகள் தொடர்பான பதிவுகளை மறைத்த கோட்டாபய: எழுந்துள்ள புதிய சர்ச்சை | Gotabaya Ordered Police Records Destroyed Stall

திடீரென இடமாற்றப்பட்ட அதிகாரிகள்

இதற்கு அடுத்து வந்த அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்கள், பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடவில்லை என்பதுடன் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளையும் கையாளவில்லை.

மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், குடும்பங்களின் சட்டத்தரணிகளுக்கு இடங்களிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதுடன், பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பான தரவுகளை அழித்தமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US