கோட்டாபயவால் 69 லட்சம் வாக்காளர்கள் மட்டுமல்ல நாங்களும் ஏமாற்றமடைந்துள்ளோம்: ஆளும் தரப்பு எம்பி சாடல்
ஜனாதிபதி நடைமுறைப்படுத்தும் சில வேலைத்திட்டங்கள் அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தவை அல்ல என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க(Gevindu kumaratunga) தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக் குழுவின் தலைவர் பதவியை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமை இந்த நிலைமைகு காரணமாக அண்மைய சம்பவம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஞானசார தேரரை இப்படியான பதவியில் நியமித்தன் மூலம் தான் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இருந்தே பேசி வந்த நாட்டின் உரிமைகள் மற்றும் தார்மீகம் என்பன ஒரு புறத்திற்கு தூக்கி எறியப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனது இரண்டு ஆண்டு பதவி காலத்திற்கு முன்னர் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த, புதிய அரசியலமைப்புச் சட்டம், தேசிய முக்கியத்துவமிக்க வளங்கள் சர்வதேசமயப்படுத்துவது போன்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாக தான் உட்பட அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகள் பெரிய ஏமாற்றத்தில் உள்ளதாகவும் கெவிந்த குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் யுத்துகம (கடமை) அமைப்பின் தலைவரான கெவிந்து குமாரதுங்க, சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri