கோட்டாபய கொலை முயற்சி வழக்கு ஒத்திவைப்பு
2022ம் ஆண்டு இடம்பெற்ற சாகித்திய விருதுகள் விழாவில் சிறந்த தமிழ் நாவலுக்கான விருதைப் பெற்ற அரசியல் கைதியான சிவலிங்கம் ஆரூரன் கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கையில், பொலிஸார் 15 மாதங்களாக தனிச் சிறையில் தடுத்து வைத்து சித்திரைவதை செய்து வாக்கு மூலங்களைத் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஐவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு - கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் கோட்டாபய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிடர் ஜெனரல் ரோகாந்த அபேசுரிய அரசதரப்பு சாட்சியங்களை நிறைவு செய்ததையடுத்து 2ஆம் எதிரியாகிய சிவலிங்கம் ஆரூரனது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
அவர் 2ம் எதிரியின் சாட்சியத்தை நெறிப்படுத்துகையில் சாட்சி தனது சாட்சியத்தில் சுய விருப்பத்தில் தான் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கவில்லையெனவும், சித்திரைவதை செய்து வாக்கு மூலங்களைத் பெற்றுள்ளதாகவும், மேலும் தனது சாட்சியத்தில் 2009ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் திகதி காலை வைத்தியப் பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷ் முன்னிலையில் பொலிஸார் கொண்டு சென்ற பொழுது தன்னை பொலிஸார் தலையில் புத்தகத்தை வைத்து அடித்ததுடன் கை கால்களைக்கட்டி சித்திரவதை செய்ததையும் அதனால் தனக்கு ஏற்பட்ட கடும் காயங்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் காட்டியுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரி காயங்களை பார்வையிட்டு பரிசோதனை செய்ய மறுத்ததுடன் பொலிஸார் சித்திரவதை செய்ததையோ அதனால் ஏற்பட்ட காயங்களைப் பற்றிய விபரங்களையோ சட்ட வைத்திய அறிக்கையில் பதிவு செய்தால் அது தமக்கு பிரச்சினை என கூறி தன்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவில்லையென சாட்சியமளித்ததையடுத்து எதிரி தரப்பு சாட்சியங்களை நிறைவு செய்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அரச தரப்பு, 2ம் எதிரி சார்பிலும் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழக்கை மார்கழி மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
