கோட்டாபயவை சிறையில் அடைக்க வேண்டும்: எஸ்.எம்.மரிக்கார் - செய்திகளின் தொகுப்பு (Videos)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று இலங்கையை அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் காட்டிலும் கோட்டாபய இலங்கைக்கு வந்தமை சிறந்ததாகும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத நிலையில், நாட்டை விட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்சவிற்கு அதீத பாதுகாப்புடன் கூடிய வீடு ஒன்றை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,