அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரம் சரி! கொதித்தெழுந்த தேரர் நாட்டு மக்களுக்கு கூறிய விடயம்
69 இலட்சம் மக்கள் வாக்களித்து 3 இல் 2 பலத்தை கொடுத்தது இதற்காகவா என கோட்டாபய ராஜபக்சவிடம் தென்னிலங்கை தேரரொருவர் கடும் சீற்றத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,
போலியான கண்காட்சிகளை நடத்தி மக்களை ஏமாற்றிய ராஜபக்ஷர்களிடம் நாமும் ஏமாற்றமடைந்து விட்டோர். கோட்டாபய ராஜபக்ஷவிற்கே நானும் வாக்களித்தேன்.
அது தொடர்பில் இன்று நான் 1000 முறை கவலை அடைகிறேன். இந்த நாட்டில் ஒவ்வொரு அடியும் நொறுங்கி போயுள்ளது. கோவிட்டை வைத்து உழைக்கின்றார்கள்.
நாட்டில் பணம் இல்லை என மக்களுக்கு கூறி, 36 கோடி செலவழித்து வாகனங்களை இறக்குமதி செய்கின்றார் பசில். 100 நகரங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
புதிய பாதைகளை அமைக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் மக்களுக்கு சொல்கிறார்கள் பணம் இல்லை என்று.
மக்களுக்கு சொல்கின்றேன், இவர்களுக்கு இனி வாக்குகளை வழங்க வேண்டாம். இவர்களை வீட்டிற்கு அனுப்ப நேரம் சரி என சுட்டிக்காட்டியுள்ளார்.