கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கிளிநொச்சி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பு
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கிளிநொச்சி பிரதேச தமிழ் மாணவர்களுக்கு ஒரு தொகை அப்பியாசப் புத்தகங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
போராட்டக்காரர்களின் வடக்கு விஜயத்தின் ஒரு அங்கமாக புத்தகங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
கோட்டா கோ கம நூலகத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்ட அப்பியாசப் புத்தகங்களில் ஒரு தொகைப் புத்தகங்கள் இதன்போது கிளிநொச்சி ஸ்கந்த புரம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிங்களம் - தமிழ் மக்கள் இடையே நேசப்பாலத்தை கட்டியெழுப்பும் முயற்சி
அத்துடன் பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் போராட்டக்களத்தின் இளைஞர்கள் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
தென்னிலங்கை சிங்கள மற்றும் வடக்கு தமிழ் மக்கள் இடையே பலமான நேசப்பாலமொன்றை கட்டியெழுப்பி நாட்டின் நலன் கருதிய போராட்டத்தில் இருதரப்பும் இணைந்து செயற்படுவதற்கான வழியேற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கோட்டா கோ கம போராட்டக்கள ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.