சீனா தொடர்பில் கூகுள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு
உலகின் முதன்மை இணைய சேவை வழங்குநரான கூகுள் நிறுவனம் தனது மொழிப்பெயர்ப்பு செயலியின் சீனாவுக்கான சேவையை நிறுத்த தீர்மானித்துள்ளது.

சீனாவில் குறைந்தளவிலான பயனாளர்களே கூகுள் மொழிப்பெயர்ப்பு செயலியை பயன்படுத்துவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சீனாவின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், 2010 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் சீனாவுக்கான தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

சீனாவில் இணையத்தள வசதிகள் சீன அரசாங்கத்தின் நிறுவனம் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் முகநூல், இன்ஸ்டாரகிராம், வட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் சீனாவின் வலைத்தளங்களே பயன்பாட்டில் உள்ளன. யூடியூபுக்கு பதிலாக யூகூ என்ற இணையத்தளம் பயன்பாட்டில் உள்ளது.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam