குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை விட குறைவாக இருப்பின் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை குறைந்த விலையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் வகுக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி
மாத்தளை மாவட்டத்தில் தொழிற்பேட்டைகளில் நடைபெற்ற சிறப்பு ஆய்வுப்பயணத்தின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காலணிகள், டைல்ஸ், லைட்டர்கள், தீப்பெட்டிகள் மற்றும் பல பொருட்கள் விதிக்கப்பட்ட வரிகளை விட குறைந்த விலையில் நாட்டில் விற்கப்படுகின்றன.
இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த பொருட்களாக இருக்கலாம் என்றும், இது குறித்து விசாரித்து முறையாக முறைப்பாடு செய்வது தொழிலதிபர்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது அரசாங்கத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாத ஒரு செயல்முறை என்றும், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.