பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! - பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வு
பிரான்ஸில் இன்று முதல் ஒரு சில இடங்களை தவிர்ந்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்நாட்டு பிரதமர் Jean Castex இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தற்போது அமுலில் இருக்கும் இரவு நேர ஊடங்கு வரும் ஜூன் 20ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இனிமேல் ஊரடங்கு இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் கட்டாயமில்லை.
எனினும், அதில் சில விதிவிலக்குகள் உண்டு. நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்கள் போன்ற இடங்களில் மாத்திரம் முகக்கவசம் அணியவேண்டும்.” என பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உணவகங்கள், அருந்தகங்களின் உள்ளேயும் வெளியேயும் சிறிய கூட்டங் களுடன் "மினி இசைக்கச்சேரிகளை" நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அந்நாட்டு கலாசார அமைச்சர் Roselyne Bachelot தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் "Fête de la musique" என்று அழைக்கப்படுகின்ற உலக இசைத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் நேரகாலத்துடன் நீக்கப்பட்டுள்ளன.
உணவகங்கள் கிட்டத்தட்ட முழு அளவில் இயங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவுகள் தேர்தலை நோக்க மாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன என்று அந்நாட்டு எதிர்கட்சி தரப்பினர்கள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
