விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரப்போகும் பணம்
நாட்டில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், பயிர் சேத மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இழப்பீடு
அத்தோடு, இதற்காக சிறப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்ச் சேதம் குறித்து விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




