புதிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள பணிப்புரை
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை செயல்படுத்தி பிரதிபலன்களை பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை துறைசார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நவீனமாக்கல் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றைய தினம் (21.12.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தனியார் துறையினரின் பங்களிப்பு
இதேவேளை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற தேவையான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று விவசாய நவீனமயமாக்கலுக்கு 8 பிரதான அமைச்சுகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், 8 திணைக்களங்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |