இலங்கையின் பல்வேறு தேவாலயங்களில் அனுஸ்டிக்கப்பட்ட பெரிய வெள்ளி தின ஆராதனைகள்
உலகெங்கும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.
மட்டக்களப்பு
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசுக்கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று (29.03.2024) மட்டக்களப்பு - புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு (batticaloa) மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றுள்ளது.
தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலும் பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - ருசாத்
யாழ்ப்பாணம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில் இயேசுக்கிறிஸ்துவின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஒப்புக்கொடுத்துள்ளார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு
இதேவேளை, பெரிய வெள்ளி சிறப்பு திருப்பலி பூஜைகள் கொழும்பு - 12 புதுக்கடையில் அமைந்துள்ள நல்மரண மாதா ஆலயத்திலும் சிறப்பாக நடைபெறுகின்றது.
குறித்த பூஜையில் பக்தர்கள் மிக ஆர்வமாக கலந்துகொண்டமையை காணமுடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |