பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு நிவாரணம்
யுத்தம் காரணமாக மியன்மாரில் (Myanmar) இருந்து இடம்பெயர்ந்து பாணந்துறையில் (Panadura) தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு மன்னாரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அவசர வீட்டு நிவாரணம் ஒன்றை வழங்கி வைத்துள்ளது.
குறித்த நிவாரணமானது, நேற்றைய தினம் (28.03.2024) வியாழக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பங்களாதேஷில் (Bangladesh) வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம் அகதிகள் 105 பேர் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
வீடுகளின் ஒப்பந்தம்
அதனையடுத்து, யாழ்ப்பாணம் (Jaffna) வலிகாமம் வடக்கு பகுதியை வந்தடைந்த மியன்மார் அகதிகள் 105 பேரையும் மீட்ட கடற்படையினர் யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த மியன்மார் அகதிகள் கொழும்பு பாணந்துறையில் தங்க வைக்கப்பட்டனர்.
குறித்த மக்கள் இருந்த வீடுகளின் ஒப்பந்தம் முடிவடைந்தமையினால் குறித்த வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அடிப்படை உதவிகள்
இதனால் எவ்வித
அடிப்படை உதவிகளும் இன்றி மியன்மார் அகதிகள் 105 பேரும் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
எனவே, அந்த மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பாணந்துறை பகுதியில் அவர்கள் தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டில் தங்கி இருக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |