ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கோமிகா உடுகமசூரிய நியமனம்
அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய (Gomika Udugamasooriya), விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் உடுகமசூரியவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஆலோசகர் பதவி
கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டதாரியாவார்.

பேராசிரியர் கோமிகா, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும், டெக்சாஸ் தென்மேற்கு மருத்துவ மையத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பல காப்புரிமைகளைப் பெற்றுள்ள இவர், அமெரிக்க அரச பணியில் இருந்து விலகி, கௌரவ சேவையாக ஜனாதிபதியின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam