கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்(Video)
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வர பயன்படுத்தப்படும் புதிய முறையை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கத்தினால் செய்யப்பட்ட கடன் அட்டைகள்
24 கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடன் அட்டைகளை கடத்தி வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைத்தில் வைத்து சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்ப்பதற்கு வங்கிகள் வழங்கிய கடன் அட்டைகளை போல் இருக்கும் வகையில் இந்த தங்க கடன் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணே இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
இவர் அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வருபவர் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பெண் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை 1.52 அளவில் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்துள்ளார்.
இந்த பெண் முதலில் துபாய் நாட்டில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளார்.
சுங்க அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெண், இலங்கை மற்றும் இந்தியா ஊடாக துபாய் நாட்டுக்கு நான்கு முறை பயணம் செய்துள்ளமை அவரது கடவுச்சீட்டில் உள்ள பதிவுகள் மூலம கண்டறியப்பட்டுள்ளது.
பெண் கொண்டு வந்த பயணப்பொதியில் 6.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட 27 வங்கி கடன் அட்டைகள், தங்கச்சங்கிலிகள், வலையல்கள், மோதிரங்கள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் இவ்வாறு சட்டவிரோதமாக கடத்தி வரப்படுவதன் காரணமாகவே 24 கரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வர தடைவிதித்து நிதியமைச்சு சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
