இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றம் - பதிவான புதிய நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் விலை நண்பகலுக்குப் பின் மீண்டும் 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று காலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (30.04.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்றைய தினம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவரம்
அந்த வகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam