தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 698,603 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 197,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,550 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத விலை உயர்வு
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
