உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ள நிலையிலேயே இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

செட்டியார்தெரு தங்க விலை நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 179,500 ரூபாவாக காணப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam