கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன.
செட்டியார் தெருவில் தங்க நிலவரம்
இன்றைய தினம் கொழும்பு - செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்
இந்த நிலையில் தங்க விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அவுன்ஸிற்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டாலர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸிற்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan