அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இலங்கையின் இன்றைய தங்க விலை விபரம்

Dharu
in பொருளாதாரம்Report this article
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18.10.2024) சடுதியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 196,250 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாருடங்களில் நாட்டில் தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டது இதுவே முதன் முறையாகும்.
தங்கத்தின் விலை
எதிர்காலத்தில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 210,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 194,400 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,710.73 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
