இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியை வைத்து தயாரிக்கப்படும் நகைகள்...!
இறந்தவர்களின் அஸ்தியை வைத்து தயாரிக்கப்படும் இலங்கை நகைகளுக்கு உலகில் அதிக கிராக்கி காணப்படுவதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை ஈட்ட முடிந்துள்ளது.
இலங்கை நகைகளுக்கு அதிக கிராக்கி
இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை.
ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த நகைகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.
இலங்கையில் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் இந்த நகைகள் செய்யப்படுகின்றன.
இந்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த நகைகளின் தரம் உயர்ந்ததால், முன்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஆர்.கே.எஸ். நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
