தங்க முலாம் பூசப்பட்ட ஆயுதம் பற்றி நீதிமன்றிற்கு அளிக்கப்பட்ட அறிக்கை
அண்மையில் ஹெவ்லொக் வீதி அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தங்க மூலாம் பூசப்பட்ட ரீ-56 ரக துப்பாக்கி குறித்து முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விசாரணை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலானாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆயுதமானது வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியின் பொறுப்பில் இருந்தது என நீதிமன்றிற்கு, புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
எனினும் இந்த ஆயுதம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுத சட்டத்தின் 43ம் இலக்க சரத்தின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பேர்டி பிரேமலால் திஸாநாயக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
