தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் குறித்து வெளியான தகவல்
கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இலங்கையில் கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலையானது இருபதாயிரம் ரூபாவை விட அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்கா தனது அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் விதித்த பரஸ்பர வரிகள் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்க விலையில் பதிவான மாற்றம்
அதனடிப்படையில் ஏப்ரல் 22 அன்று, உள்ளூர் தங்கத்தின் விலைகள் 24 மணி நேரத்திற்குள் சுமார் 17000 ரூபா அதிகரிப்பை பதிவு செய்து வரலாற்று உச்சத்தை எட்டியது.
24 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை ரூ. 275,000 - 277,000 ஆகவும், 22 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை ரூ. 252,000 - 254,000 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.29875, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ. 239000, 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.32375, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.259000 என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
