இலங்கையில் முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களில் அதிரடி : பெருந்தொகை தங்கம் மீட்பு
இலங்கையில் 13 முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களை சுங்கப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அவற்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத தங்கம் கையிருப்புக்காக 4.5 பில்லியன் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட உள்ளது.
தங்கம் பறிமுதல்
சிலர் சட்டவிரோதமான முறையில் தங்கத்தை விடுவிக்க தயாராகி வருவதாகவும் சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பல முன்னணி நகை நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக தங்கத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.
நாட்டில் உள்ள முக்கிய நகை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான வழிகள் மூலம் தங்கப் கையிருப்பைப் பெறுகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 30000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக சுங்கப் பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |