“பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளோம்”
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், விவசாயத்துறையில் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள, பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) கலந்துரையாட உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் (Tissa Kuttiyarachchi) தகவல்படி, இந்தக்கலந்துரையாடல் அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் வகையில் இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக விவசாயிகள் பசளைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜனாதிபதியுடன் விவாதித்த பின்னர் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
