ஞானசார தேரரின் காவி உடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்
சிறைச்சாலையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டதாகவோ அல்லது சிறைச்சாலை விதிகளை மீறிச் செயற்பட்டதாகவோ எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(14.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லேத்தன்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும், கைதியாக உள்ள மதகுருமாருக்கு எதிராகத் தன்னிச்சையாகச் செயற்பட எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
குற்றச்சாட்டு
காவியுடை தவறாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, 2026, அக்டோபர் 12 அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஞானசார தேரரின் எதிர்ப்பையும் மீறி, அவருக்கு பலவந்தமாகச் சிறைச்சீருடை அணிவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி - கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan