நாடாளுமன்ற உறுப்பினராகும் ஞானசார தேரர்?
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை(Gnanasara Tero) நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்பட உள்ளார்.
அபே ஜன பல கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்தை அதுரலிய ரதன தேரரும், ஞானசார தேரரும் குறிப்பிட்ட கால வரையறையின் அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என இணங்கப்பட்டிருந்தது என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அதுரலிய ரதன(Athuraliye Rathana Tero) தேரரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்துள்ளதாக அபே ஜன கட்சி எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரதன தேரர் தமக்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் உறுப்புரிமையை வழங்கவில்லை என கடந்த காலங்களில் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
