நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை காலை 8:00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் இன்று (08) 436 புதிய மருத்துவர்களுக்கான 'பயிற்சிக்கு பின்னரான நியமனங்கள்' வழங்கப்பட்டன.
இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் பெரும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

புதிய மருத்துவர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்ட விதம் மற்றும் அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் திருப்திகரமாக இல்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நியமன நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே நாளை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாளை நாட்டின் பொது மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தவறான நியமனப் பட்டியலைச் சரிசெய்யக் கோரியும், தகுதியான முறையில் நியமனங்களை வழங்க வலியுறுத்தியும் இந்தத் தீடீர் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam