உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.74 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன் வெஸ்ட் டெக்சாஸ் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.03 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி
கச்சா எண்ணெய் விலை 4 மாதங்களில் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருந்தது.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மார்ச் மாதம் முதல் நாளொன்றுக்கு 200,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுப்பதற்கு சில நாட்களுக்கு முன் சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
you may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri