ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை மன்னிக்க முடியாது - ஜி.எல்.பீரிஸ்
பாடசாலை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை மன்னிக்க முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அரசியலில் இணைவதற்கு முன், நான் ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக, ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன்.
எனினும் தொற்றுநோய்களின் போது மாணவர்களின் கல்வி விடயத்தில் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.
தீர்க்கப்படாத எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். கல்வித்துறையில் 14 தொழிற்சங்கங்கள் இணையக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை, ஜே.வி.பியுடன் இணைந்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது.
இந்த தொழிற்சங்கங்களே நல்லாட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் பங்கு வகித்தன என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.