எனக்கு மரியாதை வழங்குங்கள்! சாமர சம்பத் சபாநாயகரிடம் கோரிக்கை
தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்றும் அமைச்சர் என்ற வகையில் தனக்கு மரியாதை வழங்குமாறும் சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. சபாநாயகரை வலியுறுத்தியுள்ளார்.
கௌரவ அமைச்சரே...!
சாமர சம்பத் எம்.பியை, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரே என்று சபாநாயகர் விளித்தபோதே அவர் பதிலுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரே என்று அழைக்காமல் தன்னை கௌரவ அமைச்சரே என்று அழைக்குமாறும் அவர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பதவி நிலை
பதுளை மாவட்டத்தில் இருந்து 2020ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வான சாமர சம்பத் தசநாயக்க எம்.பி., கடந்த செப்டெம்பர் தொடக்கம் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் ஊவா மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam