தேநீரின் விலையில் மாற்றம்..!
பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத்(Asela Sampath) கோரிக்கை விடுத்துள்ளார்.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட உள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய இவ்வாறு விலை குறைப்பு அறிவிக்கப்பட உள்ளது.
தேனீர் விலை அதிகரித்திருந்தது
அண்மைக் காலமாக பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை உயர்த்தப்பட்டதனால் மக்கள் தேனீர் அருந்துவதனை தவிர்த்து வந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது விலை குறைக்கப்பட உள்ளதாகவும் இதனால் பால் தேநீரின் விலை குறைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
