இலங்கையில் முகநூல் மூலம் தவறான முறையில் நடத்தப்படும் இளம் யுவதிகள்
முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் 06 யுவதிகள் பாலியல் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யுவதிகள் தனித்தனியாக முன்வைத்த 06 முறைப்பாடுகளை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றததின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
மாத்தறை, தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவர் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகள்
நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை முகநூல் கணக்கில் வெளியிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மற்றுமொரு முறைப்பாட்டை பலபோவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை அடையாளம் தெரியாதநபர் ஒருவர் தன்னை அவமதிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்துரே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |