இளம் யுவதிக்கு காதலனால் நேர்ந்த கதி
காதல் விவகாரம் காரணமாக காதலியை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஆயிஷா லக்மினி என்ற 26 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் 24 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செல்லப்பிராணி, மீன் விற்பனை செய்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான காரணம்
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு வாடகை அடிப்படையில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான காதலனுடன் உயிரிழந்த யுவதி சுமார் மூன்று வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளதுடன், திடீரென உறவை முறித்தமையே கொலைக்கான காரணம் என சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
