அரசியல்வாதிகளுக்கு வலுவான செய்தி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சிறுமியில் நெகிழ்ச்சியான தகவல்
இலங்கையின் சிறுமி நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன் இந்த சிறுமி தோல்வியடைந்த எமது அரசியல்வாதிகள் அனைவருக்கும் வலுவான செய்திகளை வழங்கி இருப்பதாக கொள்கை கற்கைகளுக்கான தெற்காசிய கல்வி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வந்து டொலர்களை தந்து உதவுங்கள்
This Little Girl promoting Tourism in Sri Lanka and also sending a strong message to all our failed politicians@narendramodi @DrSJaishankar @USAmbSL @AmitShah @IndiainSL @JoeBiden @EU_UNGeneva @antonioguterres @SecBlinken pic.twitter.com/bJfl1J8DHD
— SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES (@SAIP_FORSTUDIES) July 12, 2022
டுவிட்டரில் சிறுமி ஒருவர் சுற்றுலாப் பயணிகளிடம் உரையாடி, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிடுகிறார்.
சிறுமி ஒருவர் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் ஆங்கிலத்தில் உரையாடி, இலங்கைக்கு அவர்களின் நண்பர்களை அழைத்து வருமாறும் அப்போது இலங்கைக்கு டொலர்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
அரசியல்வாதிகளால் எனது தாய் நாடான இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல.நீங்கள் உங்களது நண்பர்களை எமது நாட்டுக்கு வருமாறு அழையுங்கள்.
நாட்டில் எல்லா இடங்களும் அருமையான இடங்கள். பல அருமையான இடங்கள் இருக்கின்றன. எங்களிடம் டொலர் இல்லை. நீங்கள் வந்து எமக்கு டொலர்களை தந்து உதவுங்கள்.
நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்தால், எமக்கு டொலர்கள் கிடைக்கும். இந்த துண்டுப் பிரசுரத்தை படியுங்கள். எமது அண்ணன்மார், அக்காமார் எமக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகள் வந்து உதவ மாட்டார்கள். நீங்கள் எங்களுக்கு உதவுங்கள் என அந்த சிறுமி தெரிவிக்கின்றார்.